போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத்தில்,21 வயது பழங்குடி பெண் ஒருவர், தலித் இளைஞரைக் காதலித்து அவருடன் சென்றதற்காக, சொந்த சகோதரர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.இங்குள்ள தார் மாவட்டத்தின் காட்போரி கிராமத்தில்தான் இச் சம்பவம் நடந்துள்ளது.சம்பந்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், தலித்இளைஞரைக் காதலித்து அவருடன் சென்றுவிட்ட நிலையில், அவரை கடந்த ஜூன் 25-ஆம் தேதி
போலீசார் துணையுடன், பழங்குடியினத்தவர் தங்களின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் தங்களின் சொந்த சாதியைச் சேர்ந்த ஒருவரை அவருக்கு திருமணம் செய்துவைக்க முயன்றுள்ளனர்.
ஆனால், அந்தப் பெண்அதற்கு உடன்பட மறுத்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள், தங்களது உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு, கொடூரமான முறையில் இளம்பெண் ணைத் தாக்கியுள்ளனர்.இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், வீடுகள் ஏதுமற்ற மலைப்பகுதியில், அந்தபெண்ணை இழுத்துச் செல்வதும், முதுகு, கால் ஆகிய இடங்களில் குச்சியை வைத்து அடிப்பதும் இடம்பெற்றுள்ளது.காவல்துறையினர் வீடியோ
வில் தெரிந்த வண்டி எண்ணை வைத்து, சர்தார் சிங், மகேஷ், டோங்கர் சிங், பிரதாப் ஆகிய இளம்பெண்ணின் சகோதரர்கள் உட்பட 4 பேரைக் கைது செய்துள்ளனர்.