tamilnadu

img

கம்ப்யூட்டர் பாபா ஹெலிகாப்டர் கேட்கிறார்!

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நர்மதா நதியை பாதுகாப்பதற்கு என்று, சாமியார்கள் தலைமையிலான அமைப்பு ஒன்று, முந்தைய பாஜக ஆட்சியில் ஏற்படுத்தப்க பட்டது. இந்த சாமியார்களில் 5 பேருக்கு, மாநில அமைச்சருக்கான அந்தஸ்தையும் வழங்கினார், அன்றைய பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். 

அவ்வாறு அமைச்சர் பதவி வழங்கப் பட்டவர்களில் ஒருவர்தான் ‘கம்ப்யூட்டர் பாபா’ எனப்படும் நம்தோ தாஸ் தியாகி என்பவர் ஆவார். ஏகப்பட்ட பக்தர்கள் இவருக்கு இருக்கின்றனர்.மத்தியப்பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தாலும், நர்மதா நதிபாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் பதவிமட்டும் கம்ப்யூட்டர் பாபாவிடமே உள்ளது.கமல்நாத் தலைமையிலான அரசும், நம்தோதாஸ் தியாகியையே நர்மதா அறக்கட்டளைக்கு நிர்வாகியாக அறிவித்துள்ளது. அவருக்குக் கீழ் பணியாற்ற 17 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அறக்கட்டளை தலைவர் பதவியை புதன்கிழமையன்று முறைப் படி ஏற்றுக் கொண்ட கம்ப்யூட்டர் பாபா,செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள் ளார். அப்போதுதான் “நர்மதா நதியை வானத்தில் இருந்து சுற்றிபார்த்து ஆய்வு செய்வதற்காக மத்தியப் பிரதேச அரசு தனக்கு ஹெலிகாப்டர் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். அப் போதுதான் நர்மதா நதியை ஒட்டி உள்ள மரங்களின் நிலை குறித்து அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.