போபால்:
கர்நாடகத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்திலும், காங்கிரஸ் ஆட்சியைகவிழ்த்து, விரைவில் பாஜக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், பாஜகவில் இருக்கும் 2 எம்எல்ஏ-க்கள் திடீரென காங்கிரசுக்கு ஆதரவாக மாறினர்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்த- நாராயணன் திரிபாதி, சரத் கவுல்ஆகிய அந்த 2 எம்எல்ஏ-க்கள், காங்கிரசில்சேருவது பற்றியும் யோசித்து வருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுபாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேலும் 4 பாஜகஎம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், சரியான நேரத்தில்அவர்கள் யார் என்பதை தெரியப்படுத்துவேன் என்றும் சாமியார் நம்தியோ தாஸ் தியாகி புதிய அதிரடியை ஆரம்பித்து வைத்துள்ளார்.“மத்தியப்பிரதேசத்தில், காங்கிரஸ் அரசு கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றும், “கர்நாடகாவில் நடத்தியதை, மத்தியப் பிரதேசத்தில், பாஜக-வால்
நடத்த முடியாது” என்றும் கம்ப்யூட்டர் பாபாகூறியுள்ளார்.