லண்டன்,ஜூன் 9- இந்திய வங்கிகளிடம் ரூ. 9,000 கோடி கடன் பெற்று,இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச் சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, ஞாயிறன்று இந்தியா - ஆஸ்தி ரேலிய அணிகள் விளையாடிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டுரசித்தார். விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கி னார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி யில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளின் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த போட்டியை விஜய் மல்லையா நேரில் கண்டு ரசித்தார். அவரை சூழ்ந்து கொண்ட நிருபர்களிடம் ‘‘நான் இங்கு கிரிக்கெட் பார்க்கவே வந் தேன்’’ என்று கூறிவிட்டு மைதான த்துக்குள் வேகமாக சென்றார்.