india

img

விஜய் மல்லையா சொத்துகளை விற்க  வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி....

புதுதில்லி:
சர்வதேச சாராய வியாபாரி விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை வங்கிகள் விற்பனை செய்யலாம் என அந்நியச் செலாவணி சட்ட நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) அனுமதி அளித்துள்ளது.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். 2019 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளியாக அவரை மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

விஜய் மல்லையா பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளார். இதனால், சட்ட ரீதியாக தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சாதக அம்சங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். 2013 ஆம் ஆண்டுஇவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் திவாலானது.இந்நிலையில், சில ரியல் எஸ்டேட் சொத்துகள் மற்றும் பத்திரங்களை விற்பனை செய்து ரூ.5,600 கோடி வரை திரட்டலாம்என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனத்துக்கு அதிககடன் தொகை அளித்த நிறுவனங்கள், கடனுக்கு ஈடாக வங்கிகளில் வைத்துள்ள சொத்துகளை விற்பனை செய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.