tamilnadu

img

மாராத்தானில் புதிய கின்னஸ் சாதனை படைத்த செவிலியருக்கு பரிசு வழங்க மறுப்பு- காரணம் என்ன ?

குட்டை பாவாடை அணியவில்லை என லண்டனில் மாராத்தானில் புதிய கின்னஸ் சாதனை படைத்த செவிலியர் ஒருவருக்கு பரிசு மறுக்கப்பட்டுள்ளது.


ராயல் லண்டன் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் ஜெஸிகா ஆண்டர்சன். இவர் லண்டனில் நடந்த மாராத்தான் ஒன்றில் பங்குபெற்று ஓடினார். அதில் ஜெஸிகா மொத்த தொலைவை 3 மணிநேரம் 8 நிமிடங்கள் 22 வினாடிகளில் கடந்து புதிய சாதனையை பதிவு செய்தார். இது ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்த நேரத்தை விட 32 வினாடிகள் குறைவாகும்.


இவர் ஸ்கர்ட் எனப்படும் குட்டைப் பாவாடையை அணிந்து கொள்ளாமல் முழுக்கால் சட்டை ஒன்றையும், டாப் எனப்படும் மேலாடையையும் அணிந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதனால் சரியான உடை இல்லை என்ற காரணத்தால் அவரது பங்கேற்பு நிராகரிக்கப்பட்டது. மாராத்தானை ஒருங்கிணைத்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தும் அவரது பங்கேற்பு மறுக்கப்பட்டது.