tamilnadu

img

வி.எஸ்.அச்சுதானந்தன் நலம் பெற்று வீடு திரும்பினார்

திருவனந்தபுரம், நவ. 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் ஒருவார மருத்துவ சிகிச்சைக்கு பிறகுநலமுடன் வீடு திரும்பினார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

ஒரு வார மருத்துவமனை வாசம் இன்றுடன் முடிவடைந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். இத்தனை நாட்கள் மருத்துவர்களின் அன்பான உத்தரவுகளுக்கு உட்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். இன்று முதல் சிறிது நாட்கள் அதே உத்தரவின்படி நடந்துகொள்ளவும் இயன்றவரை வீட்டில் இருக்கவும் பணிக்கப்பட்டுள்ளேன். மார்பக சளி முழுமையாக நீங்கும் வரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ, பார்வையாளர்களை சந்திக்கவோ கூடாது என்பது உத்தரவுகளில் முக்கியமானது. இன்னும் சில நாட்கள் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி நகர்த்த வேண்டியிருக்கிறது என்பது அதன் பொருள்.

செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது என்றாலும் மக்களோடு பழகாமல் இருக்க வேண்டும் என்பது கடினமானது. சொற்ப நாட்களில் வெளியே வரலாம் என்பது ஆறுதல். நோயின்போது ஒத்துழைத்தவர்களுக்கும் உதவியவர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.