அடுத்து ஒலிம்பிக் தான்...
ஒலிம்பிக் உள்ளிட்ட 6 மிகப்பெரிய தொடர்களின் இறுதிப்போட்டியில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவி வெள்ளிப்பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்தியது. தற்போது உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றதன் மூலம் அந்த காயத்திற்கு மருந்து கிடைத்துள்ளது. நான் இறுதிப்போட்டியில் தோற்கும்போதெல்லாம் மக்கள் விவாதிக்கத் தொடங்கிவிடுவர். அவர்களுக்கு எனது ராக்கெட் மூலம் தற்போது பதில் அளித்து விட்டேன். எனது பதக்கப் பட்டியலில் ஒலிம்பிக் தங்கம் மட்டுமே நிலுவையாக உள்ளது. அதையும் விரைவில் பெறுவேன் என்ற நம்பிக்கையில், சீனா மற்றும் தென் கொரியா ஓபன் போட்டிகளில் கவனம் செலுத்தி ஒலிம்பிக் தொடருக்குத் தயாராகுவேன்.
தங்க மங்கை சிந்து அளித்த பேட்டியின் சுருக்கம்...