சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, நவ.13- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழி யர்களுக்கு மாத ஓய்வூதி யம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் ஒட்டு மொத்த பணிக்கொடையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பணியி டங்களை நிரப்ப வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடும் முடி வைக் கைவிட வேண்டும். சமையல் எரிவாயுவை அரசே ஏற்று வழங்க வேண் டும். உணவு செலவு மானியம் ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சியில் செவ்வா யன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சத்திய வாணி தலைமை வகித்தார். பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வளன்அரசு தொ டங்கி வைத்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சத்துணவு ஊழியர் சங்க வட்டச் செய லாளர் ராஜேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட் டப் பொருளாளர் சுரேஷ் பாபு, மாவட்டத் தலைவர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர்.
தஞ்சாவூர்
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வீராச்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்ட பாணி, மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்கசாமி, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.முரு கையன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெ.சசிகலா சிறப்புரையாற்றினார். வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் நிறைவுரை யாற்றினார். சத்துணவு ஊழி யர் சங்க மாவட்டச் செயலா ளர் தி.ரவிச்சந்திரன் கோரிக் கை விளக்கவுரையாற்றி னார். மாவட்டப் பொருளா ளர் எஸ்.சோமநாதராவ் நன்றி கூறினார்.