சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, நவ.26- 36 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிஓய்வு ஊழியர்களுக்கு பணி குறையாக ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 9000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று திருச்சி ஆட்சியர் அலுவல கம் அருகில் மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலை வர் சத்தியவாணி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநில செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் ராஜேந்தி ரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட செயலா ளர் வளன்அரசு, பொருளாளர் பழனிசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார். போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட நிர்வாகிகள் ஜெயராஜ், கிரேஸ்லில்லி, சாந்தி, அல்போன்சா, சசிகலா, பிச்சாயி உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டம் விளமல் கல்பாலம் அருகில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.சி.குமார் தலைமையேற்றார். சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ராஜசேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநில செயலாளர் அய்யம்மாள் போராட் டத்தினை துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநில தலைவர் எம்.சௌந்தரராஜன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் உ.சண்முகம் மாவட்ட தலைவர் எம்.ராஜமாணிக்கம், மாவட்ட செய லாளர் வெ.சோமசுந்தரம், வட்ட தலைவர் டி.எஸ்.அசோக, வட்ட செயலாளர் என். தம்பிதுறை மற்றும் தோழமைச் சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டு போராட்டத்தை ஆதரித்து பேசினர். தொடர்ந்து ஈடுபட்ட 300-க்கும் மேற்பட் டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.