tamilnadu

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

கிருஷ்ணகிரி, நவ.5- கிருஷ்ணகிரி குந்தார ப்பள்ளியில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி யில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் மாவட்ட 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. தலைவர் சர்ஜான் துவக்கி வைத்தார். இணைச் செயலாளர் சுபாஷினி, துணைத் தலைவர் சாந்தி முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் அரிச்சந்தின் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயாவின் நிறுவனர் முனைவர் அன்பரசன், மாவட்டச் செயலாளர் பால கிருஷ்ணன், தாளாளர் சங்கீதா அன்பரன், முதல்வர் சத்தியமூர்த்தி, மாநிலச் செயலாளர் சேதுராமன், மாவட்ட செயற்குழு முருகேச பாண்டியன், பாடகர் செயற்குழு உறுப்பி னர் சங்கர், சந்தோஷ் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற னர்.  அறிவியல் புத்தக கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர். சிறந்த அறிவியல் படைப்பு களுக்கான பரிசுகள், சான்றிதழ்கள் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலாளர் புபேஷ்குமார், ஜெயமுருகன் ராமநாதன் சிவக்குமார், திருநாவுக்கரசு. உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட தேசிய குழந்தைகள் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கிளைத் தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.