கிருஷ்ணகிரி, ஜூலை 20- ஓசூர் 8ஆவது புத்தகத் திருவிழா நடைபெற்று வரு கிறது. தினசரி 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கின்றனர். மாண வர்கள் அனைவருக்கும் இல வசமாக புத்தகம் வழங்கப் படுகிறது. சேதுராமன், சிவ குமார், துரை, அரிச்சந்திரன், சத்தியமூர்த்தி, முருகேச பாண்டியன், யுவராஜ், நாக ஜோதி, பவானி, மணி மேகலை ஆகியோர் மாண வர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியும், அறிவியல் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு வரும் மாண வர்களுக்கு பிஎம்சி கல்லூரி யும், சப்தகிரி பள்ளியும் இல வச பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளனர். காவேரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோத னைகள் மேற்கொள்ளப்படு கின்றன.