புதுக்கோட்டை, ஆக.1 - வாசிப்பும் ஒரு வகையான தொழில்நுட்பம்தான் என்றார் தமுஎகச மாநில துணைத் தலை வரும், திரைக்கலைஞருமான ரோகிணி. புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மும் இணைந்து நடத்தி வரும் 5 ஆவது புத்தகத் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சொற்பொழிவில் அவர் மேலும் பேசியதாவது: குழந்தைகளுக்கு நினைவாற்றல் இருப்பதில்லை எனக் கூறுகிறோம். ஒரு காலத்தில் நம்மிடம் தொலை பேசி டைரி இருந்தில்லை. பலரின் தொலைபேசி எண்கள் நம்முடைய மூளையில் பதிவாகியிருந்தது. இப் போது அப்படியல்ல. ஓடியாடி விளை யாடி திரிந்த நேரம் போனபிறகு, எப்போதாவது தொலைக்காட்சி களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திரைப்படங்கள் ஓடின. மற்றபடி தொலைக்காட்சிகள் வாழ்வை ஆக்கிரமித்ததில்லை. நேரத்தை எப்படிச் செலவழித் தோம் என்றால் ஒவ்வோர் இடத்தை யும் தேடித் தேடிச் சென்றிருக் கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து எத்தனையோ இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறோம். நம்மிடம் நிறைய கேள்விகள் இருந்தன.
அவற் றையெல்லாம் பெற்றோரிடம் கேட்டிருக்கிறோம். இப்போதெல் லாம் யாரும் கேள்வி கேட்பதே இல்லை. நம்மை செல்போனும், தொலைக் காட்சிப் பெட்டிகளும் ஆக்கிரமித்தி ருக்கின்றன. அரிதாக சில நல்ல விஷயங்களும் இங்கிருந்தெல்லாம் கிடைக்கிறது என்பதையும் மறுக்க வில்லை. அதிகம் வாசிப்போரின் மூளை நரம்புகள் புத்துணர்ச்சியோடு இருக்கின்றன. வாசிப்பும் ஒரு வகை யான தொழில்நுட்பம்தான். எதை வாசிக்க வேண்டும்? எதை வாசிக்கக் கூடாது? என்றும் இளைய தலைமுறைக்கு சொல்லித் தர வேண்டும். உங்கள் வாழ்வில் எது பிரச்சனையாக இருக்கிறதோ அதைக் கண்டடைந்து, அந்தப் பிரச்ச னைக்கு தீர்வு எங்கே இருக்கிறதோ அதைத் தேடி வாசிக்கச் சொல்ல வேண்டும். யாருக்கோ நடந்த பிரச்னை களை நாம் தெரிந்து கொள்வது என்பது வெறும் செய்தி மட்டும்தான். சுவாரசியமாகக் கேட்டுவிட்டு சென்று விடுவோம். நம்முடைய பிரச்சனை யைப் பற்றி யார் பேசியிருக் கிறார்கள், அதற்கான தீர்வைப் பற்றி யார் பேசியிருக்கிறார்கள் என்பதைத் தேடிப் படிக்க வேண்டும். ஒரு புத்தகத்தை குழந்தை வாசித்து விட்டால், அந்தப் புத்தகம் அக்குழந் தையைத் தொடர்ந்து வாசிக்க வைத்துவிடும். மூட நம்பிக்கைகளை வளர்க்கும், பிற்போக்குத் தனத்தை வளர்க்கும் எதுவும் நமக்குத் தேவையில்லை. பெண் குழந்தைகள் படிப்பது என்பது ஒரு காலத்தில் சவாலானது. இப்போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் படிக்க வைக்கிறோம். தடைகளை உடைத்த தால் பெண் கல்வி வாய்த்திருக்கிறது. அதேபோலத்தான் பெண் அடிமைத் தனத்தையும் உடைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
தமுஎகச புத்தகப் பேரணி
முன்னதாக தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா வையொட்டிய விழிப்புணர்வு புத்தகப் பேரணி நடைபெற்றது. புதுக் கோட்டை அண்ணா சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக புத்தகத் திருவிழா நடை பெறும் நகர்மன்ற வளாகம் வரை நடைபெற்ற பேரணிக்கு, திரைக் கலைஞர் ரோகிணி தலைமை வகித்தார். கவிஞர் தங்கம்மூர்த்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பிரகதீஸ் வரன், மாநிலத் துணைச் செயலர் நீலா, மாவட்டத் தலைவர் ராசி பன்னீர் செல்வன், மாவட்டச் செயலர் ஸ்டா லின் சரவணன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் சு.மதியழகன், இரா.தனிக் கொடி, மாவட்டப் பொருளாளர் ஜெய பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பாண்டியன் சிலம்புப் பாசறையின் சார்பில் சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.