அவிநாசி, அக்.13- சேவூர் - கோபி மெயின் ரோட்டில் பி.கே.ஆர். மைதானத்தில் ஞாயிறன்று கிரிக்கெட் போட்டி துவங்கியது. திருப்பூர் டைட்டன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் சேவூரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. திருப்பூர், நாமக்கல், கோபி, ஈரோடு, கோவை, கோத்த கிரி உட்பட 32 அணிகள் பங்கேற்றுள்ளன. ஞாயிறு தோறும் நடைபெறும் இப்போட்டியில் வாரம் ஆறு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு கால் இறுதி, அரை இறுதி போட்டிகள் நடைபெறும். இறுதியாக நவம்பர் 24 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் அணிக்கு ரூ.25 ஆயி ரமும், 15 கேடயமும், 2வது பரிசாக ரூ.15 ஆயிரமும், 15 கேடயமும், 3வது பரிசாக ரூ.7 ஆயிரம் ரொக்க பண மும் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த ஆட்ட நாய கன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த கேப்டன் ஆகி யோர் தேர்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முன்னதாக, முதல் போட்டியை திருப்பூர் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குனர் வடிவேலு தொடங்கி வைத்தார். சேவூர் காவல் துணை ஆய்வா ளர் சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிரிக் கெட் மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டார்.