tamilnadu

img

கொரோனாவும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களும்

கிருஷ்ணகிரி, ஏப். 18- பிற மாநிலங்களிலிருந்து ஓசூர் சிப்காட் பகுதி தொழிற்  சாலைகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வேலைக்கு வந்தவர்கள் கொரோனா தடுப்பு 144 தடை சட்டத்தால் உணவுக்கும், தங்கிடவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி எம்ஜிஆர் நகர், அரசனட்டி முறைசாரா தொழிலாளர்களுக்கும், கெல வரப்பள்ளி சாம்ராஜ் நகரில் வசிக்கும் நரிக்குறவர் இன  மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி,வாலிபர் சங்கம், சிஐடியு சார்பில் தொடர்ந்து பல நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்த தடை காலத்திற்கு சில நேரம் கிடைக்கும் அரசின்  நிவாரண உதவிகள் மட்டும் போதுமானதாக இருக்காது, நெருக்கடிக்கான சரியான தீர்வுமாகாது என வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், அசோக் லேலண்டு-2  சிஐடியு  செயலாளர் ஜோதியப்பா, டிடிகே தொழிலாளி ரங்கநாதன், வாலிபர் சங்க கிளை நிர்வாகி விக்னேஷ், ஆகியோர் வட்டாட்சியர், சாராட்சியர்,வருவாய் அலுவலர்,மாநகராட்சி ஆணையாளரிடமும் தொடர்ந்து வலியுறுத்தினர். அதனடிப்படையில், நெருக்கடியில் உள்ளவர்கள் பட்டி யல் தயாரிக்கப்பட்டு ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளியில் எம்ஜிஆர் நகர் மற்றும் கெலவரப்பள்ளி அணை அருகில்  சாம்ராஜ் நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள் இனத்தினர் 60 பேர் உட்பட  சுமார் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓசூர்  அம்மா உணவகத்திலிருந்து காலை, மாலை இரு வேலைக்கும் உணவு வழங்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு  செய்தனர்.

ஓசூரிலிருந்து இப்பகுதிகளுக்கு தினமும் உணவு,  மற்றும் பாத்திரங்கள் எடுத்து வருவதற்கான டெம்போ  போக்குவரத்து வாடகை,சமையல் கேஸ் ஸ்டவ், பாத்திரம்  ஆகியவற்றுக் கான வாடகை போன்ற செலவீனங்களுக்கு ஜோதியப்பா, ஸ்ரீதர் முயற்சியில் சில தன்னார்வளர்கள், உதிரம் அமைப்பு, அசோக லேண்டு 2 ன் சிஐடியு தொழி லாளர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து உணவளிக்கும் பணி நடந்து வருகிறது.

சம்பளம் வழங்கப்படாத உள்ளுர், வடமாநில, தொழி லாளர்களுக்கு பாக்கி சம்பளமும், ஒரு மாத முன் பணமும்  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு, மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் வலியு றுத்தப்பட்டது. அதனடிப்படையில் வட்டாட்சியரும், தொழி லாளர் நல துணை இயக்குனரும் தலையிட்டு b ஜயஸ்ரீ எண்டர்பிரைசஸ்,ஹை டெக் சிஎன்சி,ஓசூர் காயர்பாம், உட்பட சில தொழிற்சாலை உரிமையாளர்களை நிர்பந்தித்த தன் பேரில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கடந்த  மாத சம்பளம் உடனடியாக இடத்திற்கே வந்து வழங்கப் பட்டது.

மேலும், ஆந்திராவிலிருந்து வேலைக்கு வந்து எம்ஜிஆர்  நகர், திருநாவுக்கரசர் தெருவில் பாலிதீன் கொட்டாய்கள் அமைத்து குடியிருக்கும் முறைசாரா தொழில்கள் செய்து வரும் குடும்பங்களின் 34 பேருக்கும், ஜூஜூவாடி எழில் நக ரில் அதே நிலையில் வசிக்கும் 26 குடும்பங்களுக்கும் கெல வரப்பள்ளி சாம்ராராஜ் நகர் நரிக்குறவர் குடும்பத்தினர் களுக்கும் காலை மாலை உணவுக்கும்,நிவாரண பொருள்  கள் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஓரளவேனும் நிவாரணம் பெற்று வருபவர்களும், கடந்த மாத  சம்பளம் பெற்ற 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்க ளும், தொடர் நிவாரணத்துக்கான முயற்சி எடுத்து வரும் சிஐடியு, வாலிபர் சங்கத்திற்கும் அம்மா உணவகம் மூலம்  உணவு வழங்கிட ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகள் ஆணை யாளர் சாராட்சியர், வட்டாட்சியர், அனைவருக்கும் நன்றி தெரி வித்ததுடன் தொடர்ந்து நிவாரண உதவிகள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரி வித்தனர்.