tamilnadu

img

சேலத்தில் குடிமராமத்து பணிகள்

சேலம், அக்.10- சேலத்தில், நீர் சேமிப் பிற்கும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் குடிமரா மத்து பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கூறி உள்ளார். நீர் சேமிப்பிற்கும், நீர்  ஆதாரங்களை மேம்படுத் துவதற்கும் ஆறு, ஏரி, குளங்கள், வாய்க்கால்கள், வரத்து கால்வாய்கள் தூர் வாருதல் மற்றும் புனர மைக்கும் பணிகளை மேற் கொள்வதற்கு முதலமைச் சரின் குடிமராமத்துத் திட்டம் ஏற்படுத்தப்பட்டன.  இதன்படி சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் 19 குடிமராமத்துப் பணிகளும், மேட்டூர்  அணை கோட்டத்தின் சார்பில் ரூ. 29.70 லட்சம் மதிப்பீட்டில் 1 குடிமரா மத்துப்பணியும் என மொத்தம் ரூ.5.63  கோடி மதிப்பீட்டில் 20 குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சேலம்  மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் ரூ.7.11  கோடி மதிப்பீட்டில் 313 குடிமரா மத்து பணிகளும் மேற்கொள்ளப்படு கின்றன. சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் இந் தாண்டு மொத்தம் ரூ.12.74 கோடி மதிப் பீட்டில் 333 குடிமராமத்து  பணிகள் நடைபெறு கின்றன. மேலும், சேலம் மாவட் டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சரபங்கா கோட்டம் மற்றும் மேட்டூர் அணைகோட்டத்தின் மூலம் பாசனதாரர் பங்களிப் புடன் பல்வேறு குடிமரா மத்து பணிகள் நிறைவேற் றப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 2016-17  ஆம் ஆண்டில் ரூ.3.20 கோடி  மதிப்பீட்டில் 48 குடிமரா மத்து பணிகளும், 2017-18 ஆம்  ஆண்டில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில்  31 குடிமராமத்து பணிகளும் என மொத்தம் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் ரூ.12.98 கோடி மதிப்பீட்டில்  79 குடிமராமத்துப் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 19.8.19ஆம் தேதியன்று  சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம்,  செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட புது ஏரியில் குடி மராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்த போது எடுத்த படம்..