திருவனந்தபுரம், ஜுன் 29- பாலியில் வன்கொடுமை களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து சிறார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போக்சோ சட்டத்தின் படி தண்டனையை உறுதி செய்ய யூனிசெப் உதவியுடன் பயிற்சிய ளிக்க கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது. புலனாய்வும், விசாரணையும் குறைகளின்றி நடக்க கேரள காவல் துறை நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதன் ஒரு பகுதியாக கேரள காவல்துறை புதிய நிலையான நடவடிக்கை நெறிமுறைகளை (எஸ்ஓபி) தயாரிக்கும். பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனையின்றி விடுவிக்கப்பட்ட 200 போக்சோ வழக்குகளின் பரி சீலனை அடிப்படையில் இந்த எஸ்ஓபி தயாரிக்கப்படும். வழக்கு களில் சட்ட வல்லுநர்கள், மனோ தத்துவ மருத்துவர்கள் போன்ற வர்களின் உதவி நாடப்படும். பீகார் முன்னாள் டிஜிபியும் தேசிய பேரிடர் பொறுப்பு படையின் (NDRF) முன்னாள் இயக்குநருமான பி.எம்.நாயரின் தலைமையில் இதற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
குற்றவியில் பிரிவு ஐஜி எஸ்.ஸ்ரீஜித், தென் மண்டல ஐஜி ஹர்ஷிதா அட்டல்லூரி ஆகியோர் இந்த குழு உறுப்பினர்கள். போக்சோ வழக்குகளில் தண்ட னை விகிதம் குறைவதாக கண்டறி யப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாக கேரள காவல் துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா கூறினார். வழக்குகளில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்லாது பிற ரையும் சாட்சிகளாக்குவத போன்ற வை பரிசீலிக்கப்படும். போக்ஸோ வழக்குகளை மேற்பார்வையிடும் ஐ.ஜி.எஸ் ஸ்ரீஜித் கூறுகையில், ஆய்வுக்காக 200 வழக்குகள் தொ குக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆகஸ்ட் மாதத்திற்குள் எஸ்ஓபி தயாராகிவிடும். மாநிலத்தில் தற்போது 11,954 போக்சோ வழக்குகள் உள்ளன. இவற்றில் 9457 வழக்குள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. 2497 வழக்குகள் புலனாய்வில் உள்ளன. ஏற்கனவே தண்டனை விகிதம் 17 ஆக இருந்தது. அரசின் தலையீடு காரணமாக, இது 2018 இல் 24 சதவிகிதமாக அதிகரித்தது.