tamilnadu

img

திருவோணத்தின் வரவை அறிவித்துக் கொண்டு சிங்க மாதம் பிறந்துள்ளது..... கேரள அமைச்சர் இ.பி.ஜெயராஜனின் ஓண வாழ்த்துச் செய்தி...

திருவோணத்தின் வரவை அறிவித்துக் கொண்டு சிங்க மாதம் பிறந்துள்ளது. செல்வத்தின், செழிப்பின் கொண்டாட்டமாகிய ஓணம் பண்டிகை மலையாளிகளின் தேசியத் திருவிழாவாகும். அத்துடன், இது புத்தாண்டு ஆரம்பமும் ஆகும். ‘மாவேலி நாடு வாழும் காலம்வரை மனிதரெல்லாம் ஒன்றுபோலே’ என்ற வரிகளை ஒருமுறையாவது ராகமிசைத்துச் சொல்லாத மலையாளிகள் இல்லை. உலகமெங்கும் உள்ள மலையாளிகள் தங்கள் வீட்டு நினைவுகளுடன் ஓணம் கொண்டாடுகிறார்கள். பூக்களம் அமைத்தும், ருசியான பலவகை உணவு தயாரித்தும் மலையாளிகள் செழிப்புமிக்க இந்தப் பண்டிகையை வரவேற்கிறார்கள். ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிற இவ்வேளையில் கொடும் கோவிட்-19 தொற்று நோயையும் எதிர்த்து போராட வேண்டிய சூழல். மாநில அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுபாடுகளை கறாராகப் பின்பற்றுவதன் மூலம் கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்த வேண்டும் அனைவருக்கும் மனம் நிறைந்த எனது ஓணம் நல்வாழ்த்துக்கள்.

இ.பி.ஜெயராஜன், தொழில், வாணிபம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்

கேரளஅரசு