tamilnadu

img

வயநாடு: ராகுல் வெற்றி!

கல்பேட்டா:
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.காங்கிரஸ் கட்சித் தலை
வர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்திலுள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். வியாழனன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அவர் 12 லட்சத்து 76 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐயின் பி.பி.சுனீர் 4 லட்சத்து 77 ஆயிரத்து 783 வாக்குகள் பெற்றார். பாஜக கூட்டணியின் சார்பாகப் போட்டியிட்ட பிடிஜெஎஸ் கட்சியின் துஷார் வெள்ளப்பள்ளி 1 லட்சத்து 64 ஆயிரத்து 69 வாக்குகள் பெற்றார்.

அமேதியில் தோல்வி
வயநாட்டில் வெற்றி பெற்ற நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.

மோடி கருத்து
வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனதுட்விட்டர் பக்கத்தில், “நாம் ஒன்றாக வளர்கிறோம். ஒன்றாக சேர்ந்து வளர்ச்சியை அடைவோம். ஒன்றாக நாம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது” என்று நன்றி தெரிவித்துள்ளார்.பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது ட்விட்டரில், “நாட்டு மக்களுக்கு நன்றி. இது இந்தியாவின் வெற்றி. இந்த வெற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது” என்று தெரி
வித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், “மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகளின் தவறான பரபரப்புகளை புறந்தள்ளி மக்கள் சரியான தீர்ப்பினை தந்துள்ளனர். உங்களுடைய அற்புதமான செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி இது” என்று தெரிவித்துள்ளார்.