கொல்லம், ஏப்.29-கல்வி அறிவின்றி துயரங்களை அனுபவித்தவர்களுக்கு அறிவின் ஒளியூட்டிய அரசின் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் 63,554 பேர் எழுத்தறிவு பெற்றனர். எழுத்தறிவிக்கும் ‘சாக்சரதா மிஷன்’ திட்டத்தை கேரள மாநிலஅரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து ‘சாக்ஷரதா மிஷன்’ அமல்படுத்தியதன் விளைவாக கடந்த ஆண்டைவிட 15 மடங்கு கூடுதலாக கல்வியறிவு பெற முடிந்துள்ளது. யுடிஎப் ஆட்சி காலத்தில் 2014-16 கால அளவில் 4200 பேர் மட்டுமேகல்வியறிவு பெற்றனர். ‘சாக்ஷரதா மிஷன்’ அமல்படுத்திய ஏழு எழுத்தறிவு - தொடர் கல்வி திட்டங்களின் மூலம் மாநிலம் இந்த சாதனையை படைத்துள்ளது. அக்ஷரலட்சியம் திட்டத்தின் மூலமாக மட்டும் 42,933 பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.தொடர் கல்வி மையங்கள் உள்ள2ஆயிரம் வார்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில் கல்வி அறிவற்றவர்கள் அக்ஷர லட்சியம்திட்டத்தில் கல்வி அறிவு வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். அட்டப்பாடியில் நடந்த ஒன்று, இரண்டாம் கட்ட கல்வி – சமவாய்ப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக 3670 பேரும், வயநாடில் முதல் கட்டத்திலேயே 4309 பேரும் எழுத்தறிவு பெற்றனர். கடற்கரை பகுதிகளில் கல்லாதோர் இல்லை என்கிற இலக்கை எட்ட இதுவரை 6683 பேர் ‘அக்சரா சாகரம்’ திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்றுள்ளனர். முதல் கட்டமாகதிட்டம் அமலாக்கப்பட்ட திருவனந்தபுரம், மலப்புறம், காசர்கோடு மாவட்டங்களில் 3568 பேரும், இரண்டாம் கட்டமாக நடந்த கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களில் 3115 பேரும் எழுத்தறிவு பெற்றனர். வெளி மாநில தொழிலாளர்களுக்கு மலையாளம் கற்றுத்தரும் சங்ஙாதி (நண்பன்) திட்டத்தின் மூலம் 2207 பேரும் எழுத்தறிவு பெற்றஉலகத்துக்கு வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் அமலாக்கப்படும் சமக்ற திட்டத்தின் கீழ் 1996 பேரும்,பழங்குடி மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் நவசேதனா திட்டத்தின்கீழ் 1756 பேரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.