tamilnadu

img

மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றம்... கேரளத்தில் முதல்முறையாக கேஏஎஸ் தேர்வுகள் 1535 மையங்களில் 3.8 லட்சம் பேர் எழுதினர்

திருவனந்தபுரம்:
கேரள நிர்வாக சேவை (கேஏஎஸ்) தேர்வு சனியன்று (பிப்.22) தொடங்கியது. முதல் தாள் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் 1535 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் கேரள இடது ஜனநாயக முன்னணி அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மற்றொன்று நிறைவேறியது. இந்த தேர்வுக்கு 5.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4 லட்சத்து 14 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தனர். தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 3,84,661 பேர் பதிவிறக்கம் செய்திருந்தனர். 

சனியன்று காலை 10.30க்கு முதல்தாள், பகல் 1.30க்கு இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு மையத்தில் நுழைவுச் சீட்டுகள், அடையாள ஆவணங்கள் மற்றும் பேனா மட்டுமே அனுமதிக்கப்பட்டன. செல்போன், கை கடிகாரம் மற்றும் பைகள் பொருள் பாதுகாப்பு  அறையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டாம் தாளில் எளிதான கேள்விகள் இடம்பெற்றதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.முதன்மை தேர்வு முடிவுகள் ஒரு மாதத்துக்குள் வெளியாகும். குறிப்பிட்ட மதிப்பெண் பெறுகிறவர்களுக்கு ஜுன் அல்லது ஜுலையில் விளக்க முறைமையிலான முக்கிய தேர்வு நடத்தப்படும். செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நேர்காணலை முடித்து, தரவரிசை பட்டியல் நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும். கடந்த ஆண்டு நடந்த கேரள தினத்தில் கேஏஎஸ் தேர்வுக்கான அறிவிப்பை பி.எஸ்.சி வெளியிட்டது. போதிய காரணம் இல்லாமல் தேர்வு எழுத வராதவர்கள் குறித்து பிஎஸ்சி உரிய முறையில் பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.