tamilnadu

img

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் அரசு வழங்கிய வாக்குறுதி நிறைவேறுகிறது

திருவனந்தபுரம், ஜன.16- தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கிய கேரள அரசின் வாக்குறுதி நிறை வேறுகிறது. சொந்தமாக நிலமோ வீடோ இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக் கான திட்டம் முழுமை பெற்று வருகின் றன. முதல்கட்டமாக மூணாறு குற்றி யார்வாலியில் தோட்டத் தொழிலாளர் களுக்கு குடியிருப்பு வசதி செய்யப்பட்டு வருகிறது, கட்டுமான பணி நிறைவடைந்த வீடுகள் அண்மையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.  வயநாடு மாவட்டத்தில் பிவரேஜஸ் கார்ப்பரேசன் நிதியிலிருந்து நூறு குடும் பங்களுக்கு வீடுகள் கட்டி வழங்கப்படும். இதற்காக நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பின ராயி விஜயன் தெரிவித்துள்ளார். இடுக்கி தேவிகுளம் தாலுகாவில் கண்ணன் தேவன் மலையில் 5.45 ஏக்கர் நிலம் இதற்காக கண்டறியப்பட்டுள்ளது. வருவாய் துறை நடவடிக்கைகள் முழுமை அடைந்தபிறகு  வீடு கட்டும் பணிகள் நடைபெறும் என முதல் வர் தனது முகநூல் பதிவில் தெரிவித் துள்ளார்.