திருவனந்தபுரம், ஜுன் 6- திருவனந்தபுரம் அருகே கடினங்குளம் பகுதியில் கண வனே கும்பல் பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கேரள மகளிர் ஆணைய தலைவர் எம்.சி.ஜோஸ்பின் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய ஜோஸ்பின், அச்சமூட்டும் சம்பவம் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடன டியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் கடுமை யான தண்டனை விதிக்கப் பட வேண்டும் என்றும் கூறி னார். இந்த சம்பவத்தில் கேரள மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. திரு வனந்தபுரம் புறநகர் எஸ்.பி யிடம் அறிக்கை கோரப்பட் டுள்ளது. ஊடக செய்திகளில் அடிப்படையில் மகளிர் ஆணையம் இந்த நடவ டிக்கைகளை மேற்கொண்டு ள்ளது.
மனதை ரணமாக்கும் நிகழ்வு: கே.கே.சைலஜா
கடினம்குளத்தில் கண வனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இளம்பெண்ணை பாலி யல் வல்லுறவுக்கு உள்ளாக் கிய சம்பவத்தில் கடும் நடவ டிக்கை எடுக்குமாறு சுகாதா ரம் மற்றும் சமூக நீதி, மகளிர், சிறார் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே.சை லஜா டிஜிபியை கேட்டுக் கொண்டுள்ளார். மனித மனச் சாட்சியை வேதனைப்ப டுத்தும் சம்பவம் கடினம்கு ளத்தில் நடந்துள்ளதாகவும் கூறினார். குழந்தையின் முன்பு் இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சொந்த கணவனிடம்கூட பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. பெண்களுக்கும் சிறா ருக்கும் எதிராக நடக்கும் அநீதிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்த கைய நபர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறி னார். இந்த வழக்கில் கணவன் மற்றும் அவரது கூட்டாளி கள் நால்வர் கைது செய்யப் பட்டனர். தம்பதியரின் 5 வயது குழந்தை தனது தந்தை அவரது கூட்டாளிகளிடம் பணம் வாங்கியதை பார் த்தாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளது.