tamilnadu

img

வி.முரளீதரனின் நிலைப்பாட்டுக்கு மாறாக என்ஐஏ யுஏஇ தூதரக அதிகாரிகளை விசாரிக்க அறிக்கை...

திருவனந்தபுரம்:
தூதரக பார்சலில் நடந்த தங்கக் கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகதூதரக அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று என்ஐஏதெளிவுபடுத்தியது. இது பாஜகவினரும் மத்திய அமைச்சர் வி முரளீதரனும் உண்மையை மறைக்க மேற்கொண்ட நிலைப்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது.தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சுரேஷ் உள்ளிட்ட 12 குற்றவாளிகளின் காவலைநீட்டிக்க கோரும் மனு வெள்ளியன்றுஎன்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதோடு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விவரித்துள்ள அறிக்கையில், தூதரக பாசல்கள் மூலம் பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அதிகாரிகளின் பங்கை என்ஐஏ முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. தங்க கடத்தலில், தூதரக அதிகாரிகளுக்கு எந்தப் பங்கும்இல்லை என்று மத்திய அமைச்சர் வி முரளீதரனும் பாஜக தலைவர்களும் தொடர்ந்து வாதிட்டு வருகிறார்கள். அவர்களது இந்த வாதங்களை என்ஐஏநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிமாண்ட் அறிக்கை நிராகரித்துள்ளது

இந்த வழக்கில் குற்றம்சாட்டுள்ள சதிகாரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தூதரக அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தங்கக் கடத்தலில் தூதரகத்தின் பங்கு ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தது. இருப்பினும், என்ஐஏ அது குறித்து ஆராயவில்லை. இதற்கிடையில், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட அட்டாசே, நாட்டை விட்டு வெளியேறினார். அப்போதுதான் வி முரளீதரன், ‘அட்டாசே சந்தேகத்தின் நிழலில் கூட இல்லை’ என்று வக்காலத்து வாங்கினார்.ரிமாண்ட் அறிக்கையின் ஐந்தாவது பத்தியில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட பைசல் பரீத் உட்பட நான்கு பேர்ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து கூடுதல் தகவல்களைப் பெறஇன்டர்போலுக்கு நீல நோட்டீஸ்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்தது. பைசல் பரீத்தை என்ஐஏ இன்னும் விசாரிக்க முடியவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஏற்கனவே இதற்காக துபாய் சென்ற என்ஐஏ அதிகாரிகளால், பைசல்பரீத்தை சந்திக்க முடியவில்லை. அதனால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக இருப்பதாக கூற வேண்டியகட்டாயம் என்ஐஏக்கு ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக இருப்பதாக என்ஐஏ கூறும் பைசல் பரீத் துபாயில் வசதியாக வசித்து வருகிறார். அவர் தொலைக்காட்சி சேனல்களுக்கும் நேர்காணல்களை வழங்குகிறார். ஆயினும் என்ஐஏ-க்கு இன்னும் அவர் ‘காணவில்லை’ குற்றவாளிதான்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டப்பூர்வமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு விசாரணை நிறுவனமோ அல்லது மத்திய அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் ரிமாண்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிமாண்ட் அறிக்கையில், நீல அறிவிப்பைப் பயன்படுத்துவது இந்த சந்தேக நபர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்க இன்டர்போலை அனுமதிப்பதாகும். அங்குள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை. குற்றவாளிகளை ஒப்படைக்க ஐக்கிய அரபு அமீரகம் - இந்தியா இடையே ஒருஒப்பந்தம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆயினும்கூட குற்றவாளிகளை அழைத்து வர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது புதிராக உள்ளது.வழக்கின் தொடக்கத்திலிருந்தே, தங்கம் அனுப்பிய நபரையும் அதன் பயனாளிகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று முதல்வரும் எல்டிஎப்பும் கூறி வருகிறது. ஆனால் இதுவரை எந்த புலனாய்வு நிறுவனமும் தங்கம் வந்த இடத்தையும், சென்ற இடத்தையும் விசாரிக்கவில்லை. வெள்ளியன்று தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கை இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது. கள்ளக்கடத்தல் தங்கத்தை வழங்கியவர்களையும் பயன்அடைந்தவர்களையும் அடையாளம் காண வேண்டும் என்று அறிக்கையின் 10ஆவது பத்தி கூறுகிறது. இதன் பொருள் இன்றுவரை விசாரணை அந்ததிசையில் நகரவில்லை என்பதாகும்.தூதரக பார்சல்கள் மூலம் தங்கம்கடத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் வி முரளீதரன் மட்டும் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தூதரக பார்சல்கள் மூலமாகத்தான் தங்க கடத்தல் நடந்ததை சுருக்கமாக கூறுகிறது. இந்தஅறிக்கை வி.முரளீதரன் மற்றும் ஒருபகுதி ஊடகங்களின் பிரச்சாரங்களையும் வாதங்களையும் நிராகரிப்பது தெளிவாகி உள்ளது.