tamilnadu

img

யுஏஇ தூதரக தங்க கடத்தல் வழக்கு சிவசங்கரனிடம் என்ஐஏ விசாரணை

திருவனந்தபுரம்:
யுஏஇ தூதரக பார்சலில் தங்கம் பிடிபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள அரசின் முன்னாள் ஐடி செயலாளரும் முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளருமான சிவசங்கரனிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரம் பேரூர்கடா போலீஸ் கிளப்பிற்கு வியாழனன்று மாலை 4 மணியளவில் வந்த சிவசங்கரனிடம் 6 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது. சொப்னாவும் கடத்தல்கும்பலும் அடிக்கடி சந்தித்த அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க சிவசங்கரன் உதவியதாக கூறப்படும் நிலையில் அவருக்கு கூடுதல் தொடர்பு உள்ளதா என்பதுகுறித்து விசாரிக்கப்படுகிறது. ஏற்கனவே, சுங்கத்துறையினர் கடந்த வாரம் சுமார் பத்து மணி நேரம் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே சொப்னா, சரித், சந்தீப் நாயர் உள்ளிட்ட தங்க கடத்தலின் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள னர். அவர்களை என்ஐஏ காவலில் எடுத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கரனிடம் நடக்கும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது. தங்க கடத்தலுடன் தொடர்பு உள்ளதாக ஏதேனும் ஆதாரம் கிடைத்தால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.