tamilnadu

காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு கைது வாரண்ட்

திருவனந்தபுரம், டிச.22- புத்தகம் எழுதிய வழக்கில் ஆஜராகாத காங்கிரஸ் எம்.பி., சசிதரூருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து திருவனந்தபுரம் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு தி கிரேட் இண்டியன் என்ற புத்தகத்தை சசிதரூர் எழுதினார். அதில் கேரள நாயர் சமூகத்து பெண்களை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவனந்தபுரம் நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் சசிதரூருக்கு கைதுவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.