tamilnadu

img

கேரளத்தில் 5000 சீர்மிகு கிராமச் சாலைகள் அமைக்கும் பணி; முதல்வர் துவக்கி வைத்தார்

திருவனந்தபுரம், ஆக.5- கேரளத்தில் 2 பெரு வெள்ளங்களில் தகர்ந்த 5000 கிராம சாலைகளை சீர்மிகு சாலைகளாக புனரமைக்கும் பணியை முதல்வர் பினராயி விஜயன் காணொலி மூலம் துவக்கி வைத்தார். 11,000 கிலோ மீட்டர் நவீன சாலை அமைக்கும் இந்த நிகழ்ச்சி க்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.சி.மொய்தீன் தலைமை வகித்தார். முதல்வரின் பேரிடர் நிவா ரண நிதியில் இருந்து சீர்மிகு கிராம சாலைகள் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேர ளத்தில் முதல் முறையாக உள்ளாட்சி சலைகள் அமைக் கும் சிறப்பு திட்டமாகும் இது. 2018 ஆம் ஆண்டிலும் 2019 ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தகர்ந்த தும் உள்ளாட்சி அமைப்புக ளின் கட்டுப்பாட்டில் உள்ளது மான சாலைகளை நவீனப் படுத்துவதே திட்டத்தின் நோக்கம். 5000 பணிகளின் மூலம் 11,000 கிலோ மீட்டரில் இந்த சலைகள் அமைய உள்ளன. சாலை அமைப்பின் முன் னேற்றத்தையும் தரத்தையும் சரிபார்க்க மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் இருக்கும். இந்த கட்டுமா னத்தை உள்ளாட்சி அமைப்பு கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் மேற்பார்வையிடு வார்கள். இதில் பலருக்கு உள்ளூர் வேலைவாய்ப்பு கிடைக்கும்.