திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த வாரம் துபாயிலிருந்து சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்டிருப்பதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த அந்த பார்சலை சோதனையிட்ட போது அதில் 30 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.அரசு ரீதியாக அனுப்பப்படும் பார்சல்களை பொதுவாக சோதனையிடும் வழக்கம் இல்லை. இதை பயன்படுத்தி நாட்டில் முதன்முறையாக நடந்துள்ள தங்க கடத்தல் குறித்த விவரம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிறன்று வெளியானது. இதுதொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் முன்னாள் மக்கள்தொடர்பு அலுவலரான சரித் கைதுசெய்யப்பட்டார்.
ஐக்கிய அரசு எமிரேட் தூதரக முன்னாள் ஊழயரான சொப்னா சுரேஷ்-க்கு இந்த கடத்தலில் முக்கிய பங்கு உள்ளதாக சுங்கத்துறையினருக்கு தெரியவந்தது. அவரது வீட்டை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். சொப்னா தலைமறைவாக உள்ளார். கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த ஊழியராக சொப்னா பணியாற்றி வந்த நிலையில் அவர் அந்த பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஐ.டி.செயலாளர் நீக்கம்
குற்றப்பின்னணி உள்ள சொப்னா சுரேசை நியமனம் செய்த தகவல் தொழிநுட்ப செயலாளரும், முதல்வர் அலுவலக செயலாள ருமான எம்.சிவசங்கர் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மீர் முகம்மதுக்கு கூடுதலாக அந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.