கரூர், ஜூன் 18- சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கரூர் மண்டலத்திலுள்ள 5 பணி மனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து கள் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக் கப்படுகின்றன. இயக்கப்படும் பேருந்துக ளில் 60 சதவீதம் பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்க வேண்டும், பேருந்துகள் முழு வதும் பயணிகளை கூட்டமாக அடைத்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அரசு அறிவித்த விதிகளை போக்குவரத்து நிர்வா கம் பின்பற்றாமல் செயல்பட்டு வருகிறது. அரசு விதிகளை அமல்படுத்த வேண்டிய போக்குவரத்து நிர்வாகம் கலெக்ஷன் அதிக மாக இருக்க வேண்டும் என ஊழியர்களை நிர்ப்பந்திக்கிறது. மேலும் கலைக்சன் குறைவாக உள்ள ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறது.
நகரப் பேருந்தில் 26 பேரும், புறநகர் பேருந்துகளில் 33 பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்துறை அதிகாரிகள் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று கொண்டு கூடுதல் பயணிகளை பேருந்தில் ஏற்றி விடுகிறார்கள். மேலும் 50 சதவீத பேருந்துகளை இயக்குவதற்கு, தேவை யில்லாமல் அனைத்து ஊழியர்களும் வேலைக்கு வரவேண்டும் என கூறி ஊழியர்களை அலைக்கழிக்கப்படு கிறார்கள். இரவு 9 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 5 மணி வரை ஊரடங்கு காலம் இருக்கும்பொழுது, இரவு பணிக்கு கட்டாயமாக ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என வரவழைக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு கொரோனா பரவாமல் இருக்க எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கை களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் கரூர் மண்டல போக்குவரத்து நிர்வாகத்தில் தலையிட்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அரசு விதிகளுக்கு உட்பட்டு பேருந்துக ளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூறு சதவீத ஊழியர்கள் பணிக்கு வர சொல்வதையும், கட்டாயமாக இரவு பணிக்கு வரவழைப்பதையும் நிறுத்த வேண்டும். அரசு அறிவித்த விதிமுறைப்படி பேருந்துகளை இயக்கி நோய் தொற்றிலி ருந்து பொதுமக்கள், போக்குவரத்து ஊழி யர்களையும் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், வசூலை அதிகப்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திப்பதை நிறுத்த வேண்டும். இக்கோரிக்கைகள் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் (சிஐடியு ) சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலை மையில் கோரிக்கை மனு வழங்கினர். சிஐடி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயலாளர் சிறுமன்னன், கிளை நிர்வாகிகள் முத்துச்சாமி, சோம சுந்தரம், செந்தில், சிவகுமார், ராஜவேல், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.