tamilnadu

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக.17- தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஎல்எம் மாநிலத் துணைத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுந்தரம், சாந்தி பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமநீதி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.  தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன நிர்வாகி முருகையா, தலித் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் கருப்பையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்ட துணைத் தலைவர் சி.முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.தண்டபாணி  ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தேசியக் கல்விக் கொள்யின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கல்வி உரிமை கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் அரசு ஊழியர் அமைப்புகள் இணைந்து நிகழ்வுக்கு தமுஎகச கிளைத் தலைவர் நேசன் மகதி தலைமை வகித்தார். கல்வியாளர் இரா.எட்வின் சிறப்புரை யாற்றினார். தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் ரமா ராமநாதன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி  வட்டாரச் செயலாளர் செந்தில் குமார்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் மணியன், அரசு ஊழியர் சங்கம் ஜபாருல்லா ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக தமுஎகச கிளைச் செயலாளர் வம்பன்செபா வரவேற்க, பொருளாளர் திருமுருகன் நன்றி கூறினார். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதிய தேசிய வரைவுக் கல்விக் கொள்கையில் அபாயங்கள் குறித்து சிறப்பு கருத்தரங்கம் திருவாரூரில் நடைபெற்றது. இதில் மாணவிகள் மாநில உபக்குழு கன்வீனர் க.காவியா உரையாற்றினார் மாவட்ட செயலாளர் இரா.ஹரிசுர்ஜித், மாவட்ட தலைவர் பா.ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் வி.சந்தோஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜ், கலை,கல்லூரி தலைவர் அஜித் தலைவர் சிவா கலந்து கொண்டனர்.