tamilnadu

img

தந்தை பெரியார் தினத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுரை:
தந்தை பெரியார் பிறந்த தினத்தைமுன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கம், வாலிபர் சங்கம்,மாணவர் சங்கம், சிஐடியு, விவசாயிகள் சங்கம், அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சோக்கோ அறக்கட்டளை, தமிழ்ப்புலிகள், வனவேங்கைகள் கட்சி ஆகிய அமைப்புகளின் சார்பில் கறுப்பு பேட்ஜ் அணிந்துகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்டப் பொருளாளர் என்.பி.ரமேஷ்கண்ணன், மா.கணேசன், புஷ்பராஜ், ஆர்.சசிகலா, நடராஜன், கா.இளங்கோவன், க.பாலமுருகன், வி.மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

தேனி
தேனி தாலுகாவில் தேனி, பி.சி.பட்டி, பூதிப்புரம் உள்ளிட்டு ஏழுமையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச்செயலாளர் இ.தர்மர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சி.சடையாண்டி, வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் சி.முனீஸ்வரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் டி.நாகராஜ், சமூக நல்லிணக்கப் பேரவை முஹமது சபி, வி.ராஜேந்திரன், ஏ.சி.காமுத்துரை, ஜி.சண்முகம், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கம்பத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பம் ஏரியா செயலாளர் ஜி.எம்.நாகராஜன், விவசாயிகள் சங்கமாவட்டதலைவர் பி.ஜெயராஜ், நீர் பாய்ச்சி சங்க செயலாளர் எஸ் பன்னீர்வேல், சிஐடியு துணைதலைவர் பி.அய்யப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜேஆர் பழனிச்சாமி, ஏரியாக்குழு உறுப்பினர்கள் எஸ் சின்னராஜ், பெ.அய்யப்பன், எஸ்.உசேன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். 

 சின்னமனூரில் தீண்டாமை ஒழிப்புமுன்ணனி சார்பில் எஸ். பொம்மையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எஸ். ஆறுமுகம் மற்றும் மகாலிங்கம், ஏசு, பாண்டி, கோபால், மதிவாணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.உத்தமபாளையம் கோம்பையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியா செயலாளர் சி.வேலவன், எஸ்.சுருளிவேல், ராஜா, மாதர் சங்க தலைவர்சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போடியில் மாரிசாமி, முருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், மீனா, தங்கபாண்டி ,பி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ஆண்டிபட்டியில் வி.சின்னன்தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத்தலைவர் சி.முருகன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச்செயலாளர் காமராஜ்,பி.ராமன், எஸ்.அய்யர், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேவதானப்பட்டியில் பிரேம் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செல்வகுமார், தமிழ்வளவன், அழகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.திருவாடானை சமத்துவபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி எம்.முத்துராமு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி ஆதிரெத்தினம், ஜெயகாந்தன், அஞ்சு கோட்டை ஊராட்சித் தலைவர் பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமுஎகச சார்பில்நடந்த பிரச்சாரத்தில் கே.தனபால், ஜீவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

விருதுநகர்
விருதுநகர் வி.எம்.சி காலனியில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், எல்.முருகன், ஆர்.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் எம்.சுப்புராம், ராஜேஸ் வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூலக்கரையில் சிஐடியு மாவட்டத்துணைத் தலைவர் எம்.அசோகன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.லட்சுமி, திமுக சார்பில் கே.நாகராஜ், மணிகண்டன், கண்ணன், மதிமுக சார்பில் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவகாசியில் கே.முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, ஆதித் தமிழர் பேரவையின் மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர் கௌதமன், மாவட்டச் செயலாளர் பூவை ஈஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர். 

அருப்புக்கோட்டை சுப்புராஜ் நகரில் காமாட்சிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தலைவர் எஸ்.காத்தமுத்து, சுப்பிரமணி, தவசிமுனியாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நடுச்சூரங்குடியில் விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்றபோராட்டத்தில் எம்.சுந்தரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஞானகுரு ஆகியோர் கலந்துகொண்டனர்.திருவில்லிபுத்தூர் கனரா வங்கிஅருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சசிகுமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், ஜோதிலட்சுமி, திருமலை , இராஜபாளையம் நகர் இந்திரா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிவஞானம், மாரியப்பன் பிரசாந்த் செல்லமுத்து, கொம்மந்தபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனகராஜ், ராமர், நீராத்திலிங்கம், ராமசாமியாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முத்தையா, மகாராஜபுரத்தில் தங்கேஸ்வரி, மணிக்குமார் ஜெயக்குமார்ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை
சிவகங்கையில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் மு.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றியச் செயலாளர் ஜி.உலகநாதன், வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் அ.சுரேஷ், வேங் கயா, வெ.மதி, தேவகோட்டையில்மாவட்டச்செயலாளர் ஏ.பொன்னுச் சாமி, காளையார்கோவிலில் மாவட்டதுணைச் செயலாளர் மு.திருநாவுக் கரசு ,விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாவட்டச் செயலாளர் ஆர். மணியம்மா, கோமாளிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துராமலிங்க பூபதிபூவந்தியில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் ஆர்.கே. தண்டியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் அ.ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.