tamilnadu

img

பெண்ணை கடத்திச் சென்று தலித் குடும்பம் மீது தாக்குதல்.... சாதி மறுப்பு திருமணத்தால் ஆத்திரச்செயல்

கரூர்:
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்து பெண் ணின் குடும்பத்தினர் பெண்ணை கடத்திச் சென்று, தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், பவித்ரம் கிராமம் பூபாலியில் வசித்து வரும் சரவணன்- ஜோதிமணி ஆகியோர் மகன் சுபாஷ். அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த இவரும், இதேமாவட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம்பாளையம் காந்தி நகரில் வசித்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த குழந்தைவேல் மகள் கௌரியும் காதலித்து விரும்பி கடந்த பிப்ரவரி மாதம்திருமணம் செய்து கொண்டனர். அப்போதுவேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் பெண் வீட்டார் புகார் செய்ததையொட்டி விசாரித்த போது, கௌரி தனதுதாய் தந்தையுடன் செல்ல மறுத்து, திருமணம் செய்து கொண்ட சுபாஷ் உடன் தான்செல்வேன் என்று  உறுதியாக கூறி, சுபாஷ்உடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மகளை எப்படியாவது சுபாஷிடமிருந்து பிரித்துச் சென்று விட வேண்டும் என்று பல்வேறு வகைகளில் முயற்சித்து வந்த பெண்ணின் பெற்றோர், எந்த முயற்சியும் பயனளிக்காத நிலையில், கடந்த 11ம் தேதி மதியம் பதினைந் துக்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்துச் சென்று வீட்டிலிருந்த சுபாஷின் தாய் ஜோதிமணி, அண்ணன் அருண், சுபாஷ்மற்றும் அவர்களது மகளை கடுமையாக தாக்கியும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தும், சாதியை சொல்லி திட்டியும், அவர்களது மகளை கடத்திச் சென்றுள்ளனர். வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர். சுபாஷின் தாயார் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.  கடுமையாக தாக்கப்பட்ட மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காழ்ப்புணர்ச்சியில், தலித்குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தி, பெண்ணை கடத்திச் சென்று அராஜகத்தில்ஈடுபட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிப்பதுடன், காவல்துறை உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும், கடத்திச் செல்லப்பட்ட கௌரியின் உண்மை நிலை குறித்து அறிய, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.