சென்னை:
விவசாயம் பற்றி தெரியாததால்தான் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடிமராமத்துத் திட்டத்தில் ஊழல், விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல் - மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான்’ திட்டத்தில் கூட லட்சக்கணக்கான போலிகளைச் சேர்த்து நிதியைச் சுரண்டிய அதிமுக ஆட்சியின் முதலமைச்சர் பழனிசாமிக்கு “விவசாயி” என்று சொல்லிக்கொள்ள எந்தவிதத் தார்மீக உரிமையும் கிடையாது. ஒரு விவசாயி என்பவர், “விவசாயிகளின் திட்டத்திலேயே “ஊழல் செய்ய மாட்டார்; எந்த மனிதரும் தனது சொந்த வீட்டிலேயே கன்னக் கோல் போடமாட்டார்.வேளாண் சட்டங்களை எதிர்த்து பேசிய அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப் பிரமணியனுக்கு விவசாயம் பற்றி தெரியாதா?விவசாயி என்பவர் விவசாயிகளுக்கு முழுக்க முழுக்க எதிரான சட்டங்களை ஆதரிக்க மாட்டார். வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தை எங்கிருக்கிறது என கண்டுபிடித்து சொல்ல முடியுமா?மத்திய அரசின் சட்டங்களை பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியமில்லை. வேளாண்மை பற் றிய அடிப்படை அறிவு, விவசாயிகள் நலனில் அன்பு, அக்கறை இருந்தாலே போதும்.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், தி.மு.க. உள்ளிட்ட இந்தியாவின் 18 அரசியல் கட்சிகள், இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று, இந்தியக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனவே; அவர்கள் அனைவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதா?இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.