சென்னை:
மத்திய பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களை முந்திக்கொண்டு நிறைவேற்றும் அதிமுக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடைசி நாளில் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மோசமானபாதிப்புகளை உருவாக்கக் கூடிய இச்சட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.முதலாவதாக, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு (திருத்தச் சட்டத்தில்) ஒரு மிக முக்கியமான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக
அரசு கிராமங்கள், நகரங்கள் அமைப்பது,விஸ்தரிப்புக்கான பணிகளை மேற்கொள்ளும்போது நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் களிடம் கலந்தாலோசித்த பின்பு நிறைவேற்றப் பட வேண்டும் என்ற பிரிவு தற்போது நீக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் கிராமங்கள்,நகரங்களில் விஸ்தரிப்பு பணிகளுக்காக அரசுநிலங்கள் மற்றும் வீட்டுமனைகள், கட்டிடங்கள்ஆகியவற்றை கையகப்படுத்த வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நிலம் அல்லது கட்டிட உரிமையாளர்களோடு கலந்து பேசாமல் நேரடியாககையகப்படுத்திக் கொள்ள வகை செய்யப்பட்டு ள்ளது. இது நில உரிமையாளரின் அடிப்படை உரிமையை தட்டிப்பறிப்பதாக அமைந்துள்ளது.
பாஜக அரசுக்கு விசுவாசமாக - விவசாயிகளுககு விரோதமாக...
இரண்டாவதாக, தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்தும் சட்டம்மேலும் திருத்தப்பட்டுள்ளது. மத்திய அரசுநாடாளுமன்றத்தில் 17.9.2020 அன்று மூன்று முக்கியமான சட்டங்களை நிறைவேற்றி யுள்ளது. இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானது, கார்ப்பரேட் மற்றும் மொத்த வணிகர்களுக்கு வழிதிறந்திட வகை செய்யும் சட்டம் என்றஅடிப்படையில் இச்சட்டங்களை எதிர்த்து நாடுதழுவிய அளவில் போராட்டத்திற்கு அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.இம்மூன்று சட்டங்களில் ஒன்றாக உள்ளவேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத் தும் சட்டமும் நாடாளுமன்றத்தில் திருத்தப் பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ளசட்டத்தின்படி விவசாய உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்ய விரும்பும் மொத்த வணிகர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் அரசு அமைத்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மட்டும்கொள்முதல் செய்ய வேண்டும். (இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வெளியில் கொள்முதல் செய்யக் கூடாது.) இந்த நடைமுறையால் விவசாயிகளிடம் ஒரு நியாயமான விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டியகட்டாயம் இருந்தது. மேலும் அதிகாரிகள்முன்னிலையில் கொள்முதல் செய்யப்படுவ தால் உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். தற்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி வியாபாரிகளோ, கார்ப்பரேட் கம்பெனிகளோ இனி விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
பொது விநியோக முறையை சீர்குலைக்க ஏற்பாடு
மேலும் வியாபாரிகளோ, கார்ப்பரேட் கம்பெனிகளோ தாங்களே சந்தை முற்றங்களை உருவாக்கி அங்கு கொள்முதல் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.இத்தகைய மோசமான சட்டம் நாடாளுமன்றத்தில் 17.9.2020 அன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிமுக அரசு இதே மாதிரியான ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முதல் நாளே அதாவது 16.9.2020 அன்றே சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு அளித்துள்ள விளக்க குறிப்பில்,மத்திய அரசு பிறப்பித்துள்ள மாதிரி அவசரசட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றும்பொருட்டு இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக அரசின் கொள்கைகளை பாஜகவை விட தீவிரமாக அமல்படுத்தும் கட்சியாக அதிமுகமாறியுள்ளது. மேலும், மத்திய அரசு நிறைவேற்றக் கூடிய மாதிரிச் சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அதிமுக அரசு மத்திய அரசின் சட்டத்தை,மத்திய அரசு சட்டமாக்குவதற்கு முன்னரே நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?.
மேலும் இதுவரை தமிழ்நாட்டில் தனியாருக்குச் சொந்தமான கொள்முதல் சந்தைகளை (சந்தை முற்றங்களை) அனுமதிக்காத போதுஇப்போது அவசர, அவசரமாக அதை அனுமதிக்கிற சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?.இவ்வாறு மொத்த வியாபாரிகள் நேரிடையாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய அனுமதித்தால் அரசு கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்து, பொதுவிநியோக முறையும் படிப்படியாக சீர்குலைக்கப்படும் ஆபத்து ஏற்படும். ஒட்டுமொத்தத்தில் விவசாயஉற்பத்தி, கொள்முதல், விநியோகம் அனைத்தையும் கார்ப்பரேட் மயமாக்குகிற பாஜக அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் அதிமுக அரசு தயக்கமின்றி நிறைவேற்றிக் கொண்டுள்ளது என்பதே உண்மையாகும். இதனை கண்டித்துகுரலெழுப்ப அனைவரும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது