tamilnadu

img

சம்பளம் கேட்டு கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

 கரூர்,மார்ச் 19- கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மாதச் சம்பளம் வழங்கப் படாததைக் கண்டித்து காலை முதல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களாக 200-க்கும் மேற்பட்டவர்கள் பத்மாவதி மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனம் மூலமாக பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் துப்புரவு, பாது காப்பு, எலக்ட்ரிக்கல், உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறு வனத்தின் ஒப்பந்த காலம் கடந்த மார்ச் மாதம் முதல் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலை யில் கடந்த பிப்ரவரி மாத சம்பளம் இன்று வரை வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வியாழ னன்று காலை 7 மணிக்கு பணிக்கு வந்த ஒப்பந்த பணி யாளர்கள் 50-க்கும் மேற் பட்டோர் பணிகளை புறக்க ணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களிடம்  தனியார் நிறுவனத்தின் மேலாளர், காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.  இந்த நிலையில் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தியதில் வியா ழக்கிழமை மாலைக்குள் சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப் பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட ஒப்பந்தத்தொழிலா ளர்கள்  போராட்டத்தை தற்கா லிகமாக ஒத்தி வைத்து பணிக்கு திரும்பினார்.