கரூர், செப்.3- கரூர் புத்தக திருவிழா செயல் பாட்டாளர்களுக்கு பாராட்டு விழா கரூர் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் கண்காட்சி தலைவர் ப.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. இது குறித்து கரூர் மாவட்ட புத்த கக் கண்காட்சி செயலாளர் ஐ.ஜான் பாஷா கூறியதாவது: கரூர் மாவட்டத்தின் மூன்றாவது புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28 வரை பத்து நாட்கள் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கண்காட்சி தலைவர் ப. தங்கராசு, செயலாளர் ஐ.ஜான்பாஷா, பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் இணை தலைவர்கள், செயலாளர்கள் என 85 பேர் கொண்ட அமைப்புக்குழு அமைக்கப்பட்டு 56 அரங்குகள் அமைக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான தலைப்பு களில் புத்தகங்கள் இருந்தன. புத்தக கண்காட்சியை 50 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்ற னர். மொத்த விற்பனை சுமார் 80 லட்ச ரூபாய். இதில் அரசு, தனியார் பள்ளி மாணவ- மாணவியர் சுமார் இரு பதாயிரம் பேர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். இதில் பள்ளி மாண வர்கள் மட்டும் புத்தக சேமிப்பு உண்டி யல் மூலம் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கிச் சென்றுள் ளனர். இதில் பி.ஏ.வித்யாபவன் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கி உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. புத்தக அரங்கில் கோளரங்கம் அமைக்கப்பட்டு சுமார் 10 ஆயிரம் மாண வர்கள் பார்வையிட்டனர். புத்தக கண்காட்சி நடைபெற்ற பத்து நாட்க ளும் பள்ளி, கல்லூரி மாணவ- மாண விகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் துவக்கி வைத்தார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இரண்டு முறை புத்தகத் திரு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றி னார். மேலும் ரூபாய் 10 ஆயிரம் மதிப் புள்ள புத்தகங்களை வாங்கி மாணவ மாணவியருக்கு நினைவு பரிசாக வழங்கினார். பேரூர் மருதாசல அடிகளார், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், நெல்லை கண்ணன், பர்வீன் சுல்தானா, கவிஞர் தங்கம் மூர்த்தி, பார்த்திபராஜா, வெள்ளைச் சாமி, உமர் பரூக், தமிழ்ச் செல்வன், தொலைக்காட்சி நெறியாளர் கார்த்தி கை செல்வன், எழுத்தாளர் மாதவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் புத்தக கண்காட்சியில் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் தினந்தோறும் பேசினர். அரங்கிற்கு வருகை தந்த மாணவர், பொதுமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்ற செயற் பாட்டாளர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி பாராட்டப்பட்டது. புத்தக கண் காட்சி சிறப்பாக நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெறும் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்றார்.