பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக வேட்பாளராக உள்ளார். இந்நிலையில் அவர் பிரச்சாரத்தின் போது அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில் அவர் “திமுகவின் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வெளியே வந்துவிடும். நான் இங்குள்ள திமுகவினருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வன்மத்தைக் கையில் எடுக்கத் தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதைக் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்ன வந்து வீடியோ எடுப்பயோ எடுத்துக்கோ. தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பயா கொடுத்துக்கோ என்றார்.
இந்நிலையில் இன்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.