tamilnadu

img

மின் ஓய்வூதியர் பேரவை

 கரூர், ஆக.5- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் (சிஐடியு) மாவட்ட பேரவை கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெள்ளையன் தலைமை வகித்தார். மதியழகன் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் நிர்வாகி பஷீர் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.முருகேசன் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் வி.பி.கந்தசாமி வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். சங்க நிர்வாகிகள் பழனியப்பன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கரூர் மின் வட்டத்திலுள்ள ஓய்வுபெற்ற பணியாளர்களிடம் மத்திய, மாநில அரசு உத்தரவுகளுக்கு எதிராக விடுப்பு கால பணப்பலன்களுக்கு வருமானவரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். கரூர் மின் வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளா கத்தில் தொழில் சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் வகை யிலும், மத உணர்வுகளை தூண்டும் வகையிலும் குறிப்பிட்ட ஒரு மதத்தை சார்ந்த கோவில் கட்டி வருவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.