புதுதில்லி, மார்ச் 3- கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் ஈரான், இத்தாலி உள் ளிட்ட 4 நாடுகளின் மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள விசாவை இந்தியா தற்காலிக மாக ரத்து செய்துள்ளது. இந்தியாவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆக்ராவில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாமென சந் தேகமடைந்து, அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக அந்த வைர ஸால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஜப்பான் நாடுகளை சேர்ந்தோருக்கு மார்ச் 3 அன்றோ அல்லது அதற்கு முன்போ அளிக்கப்பட்ட சாதாரண விசா, இ விசா ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் சீனர்களுக் கான விசா ரத்து நடவடிக்கை தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.