தில்லி
தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லிக் – இ – ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் மார்ச் மாதத்தின் முதல் 2 வாரங்களில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, மலேசியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற நாடுகளிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தில்லி காவல்துறை அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த மாநாட்டில் 900-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தோற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் தில்லி மாநாட்டில் பங்கேற்ற இந்தியர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
இதனால் தில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விதிகளை மீறி வெளிநாட்டில் இருந்து பிரசங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது இந்திய விசா சட்டத்தின் படி 960 பேரின் சுற்றுலா விசாக்களை ரத்து செய்வதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 379 பேர் இந்தோனேஷியாவையும், 110 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.