சண்டிகர்:
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை எல்லைக்கு அனுப்பினால்,அவர்கள் சீனாவுக்கு எதிராக நன்றாக கம்புசுத்தி, லடாக் பகுதியைப் பாதுகாத்து விடுவார்கள் என்று பஞ்சாப் முதல்வரும், ராணுவ முன்னாள் கேப்டனுமான அமரீந்தர் சிங் கிண்டல் அடித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:நமது படை வீரர்கள் 20 பேர்சீனத் தாக்குதலில் உயிர் இழந் துள்ளது மிகவும் வருத்தத்திற்கு உரியது. சீனப்படைகள் ஆணிகள் பொருத்தப்பட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால்நமது வீரர்களை நாம் இழந்துள் ளோம். சீனத் தரப்பில் எவ்வித உயிர்ச் சேதமும் இல்லை. நமதுவீரர்கள் ஆயுதம் உபயோகிக்கஉத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக் காமல் விட்டது யார் என்பதும் ஏன் என்பதும் தெரியவில்லை. மத்திய அரசு நமது வீரர்களை மல்யுத்தம் செய்யச் சொல் கிறதா, அல்லது கம்புச் சண்டைபோடச் சொல்கிறதா? எனத் தெரியவில்லை. கம்புச் சண்டைதான் போட வேண்டும் என்றால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை அனுப்பி கம்பு சுற்றவைத்து, அதன் மூலம் எல்லையைக் காக்கலாம்.இவ்வாறு கேப்டன் அம்ரீந்தர் கூறியுள்ளார்.