புதுதில்லி:
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹவுதி மோடி’ (மோடி நலமா?) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்புடன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மத்தியில்,பல்வேறு இந்திய மொழிகளிலும் நலம் விசாரித்த பிரதமர் மோடி, தமிழ்மொழியில் ‘எல்லாம் சவுக்கியம்’ என்று கூறி உரையை தொடங்கினார்.இதனை, ஐஎன்எக்ஸ் மீடியாவழக்கில், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவரும், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.“வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு, குறைந்த சம்பளம், வன்முறைத் தாக்குதல், காஷ்மீரில் ஊரடங்கு, எதிர்க் கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது தவிர, நாட்டில் அனைத்தும் நன்றாக உள்ளது” என்று சிதம்பரம் கூறியுள்ளார்.