பெங்களூரு, ஏப்.4- கர்நாடக முதல்வர் குமாரசாமியின் வாகனத்தை, சென்ன ராயப் பட்டினம் சோதனைச் சாவடி அருகே தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். இது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் மத்தியில்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “முதல்வரின் வாகனத்தை நிறுத்தியதைப் போல பிரதமர் மோடியின் வாகனத்தையோ, பாஜக தலைவர் அமித் ஷாவின் வாகனத்தையோ நிறுத்தி சோதனை செய் வார்களா?” ம.ஜ.த. மாநிலத் தலைவர் விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார்