tamilnadu

img

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் அதிக பயன்கள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

பெங்களூரு, ஜூன் 28- குலேசகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவு தளத்தால் அதிக பயன்கள் உள் ளன என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். ‘இஸ்ரோ’ தலைவரும், விண் வெளித்துறை செயலாளருமான கே.சிவன் காணொலிகாட்சி மூலம் சென்னை பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விண்வெளி துறையின் பயன்  பாடுகள் பல மடங்கு அதிகரித்து  வருகின்றன. சீர்திருத்தம் செய்வ துடன், டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நகரும்போது விண் வெளி துறையின் சேவைகளை அதிகரிக்க வேண்டியது உள்ளது. இதற்கு ‘இஸ்ரோ’வை மட்டுமே சார்ந்து இருந்தால் போதாது. தனியார் துறையினரும் விண்  வெளித்துறையில் ஈடுபட தயா ராக இருப்பதால் அவர்களை யும் பயன்படுத்த முடிவு செய் யப்பட்டு உள்ளது. உலகளவில் விண்வெளித் துறை பொருளாதாரத்தில் 300  பில்லியன் அமெரிக்க டால ருக்கும் அதிகமாக முதலீடு செய் யப்பட்டு உள்ளது. ஆனால் நம் நாட்டில் 3 சதவீதத்துக்கும் குறை வாக உள்ளது.

நம் நாட்டின் நட வடிக்கைகளை மேம்படுத்துவ தற்கும், உலகளாவிய விண் வெளி பொருளாதாரத்தில் பெரும் பங்கைப் பெறுவதற்கும்  தனியார் ஈடுபாடு அவசியமா கிறது. தனியார் துறையினர் விண் வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வணிக  அடிப்படையில் பொதுமக்க ளுக்கு சேவையை வழங்க சிறிய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்புகிறோம். அதேபோல் மாநில  அரசுகளும் தானாக முன்வந்து முயற்சித்தால் அவர்களையும் இணைத்து செயல்பட தயாராக உள்ளோம். செயற்கைகோள் மற்றும் ராக்கெட் ஏவுவதை சொந்தமாக வைத்துக்கொண்டு விண்வெளி சேவைகளை வழங்க முடி யும். ஆனால் அதிகரித்து வரும்  தேவையை பூர்த்தி செய்ய முடியாது. தனியார் துறையினரை ஈடுபடுத்தினாலும், தனியார் துறையினர் ‘இஸ்ரோ’வின் பணி களை செய்யமாட்டார்கள். இத னால் ‘இஸ்ரோ’ வேலைகளில் எந்த வகையிலும் பாதிப்பும் ஏற்படாது. ககன்யான் திட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது.

 இவற்றில் சில தொழில்நுட்பங் களை மட்டும் தனியார் உருவாக்கு வதற்காக இஸ்ரோ இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களால் சில தொழில்நுட் பங்களை உருவாக்க முடியும். ஆதித்யா திட்டத்துக்கான செயற் கைகோள் தயாராக உள்ளது. ஆனால் தற்போது வாய்ப்பு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் பணிகளில் தனியார் துறையினர் எங்களு டன் சேரவேண்டும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ககன்யான் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ‘இஸ்ரோ’ தன்னுடைய 2-வது  ஏவுதளத்தை தமிழகத்தில் உள்ள  குலேசகரப்பட்டினத்தில் அமைத்து வருகிறது. மாநில அரசு  இதற்கான நிலத்தை கையப்  படுத்தி வருகிறது. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட்  ஏவுதளத்திற்கும், குலசேகரப் பட்டினத்தில் அமைக்கும் ஏவு தளத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஆனால் குலேசகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் ராக்  கெட்டுக்கு எரிபொருள் தேவை  குறைவு, எளிதாக புவிவட்டப் பாதையை அடைவது போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. விண்ணில் ஏவுவதற்கு பல செயற்கைக்கோள்கள் தயாராகி வருகின்றன. நிலைமை சீரடைய காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.