சாலையில் திரிந்த ஆட்டுக்குட்டியை, முகக்கவசம் அணிய வில்லை என்று காவல்நிலை யத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் உ.பி. மாநிலம் கான்பூர் மாவட்டம் பெக்கன்கஞ்ச்சில் நடந்துள்ளது. இதுதொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், திருட்டிலிருந்து பாதுகாக்கவே ஆட்டை கொண்டு வந்ததாக போலீசார் தற்போது சமாளித்துள்ளனர்.