பெங்களூரு:
கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பா, தனது பெயருக்கான ஆங்கில எழுத்துக் களை, நியூமராலஜி படி,மீண்டும் மாற்றி அமைத்துள்ளார்.எடியூரப்பாவுக்கு, வெள்ளியன்று மாலை 6.30 மணியளவில் ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக, BS Yeddyurappa என்ற இருந்ததனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை BS Yediyurappa என்று எடியூரப்பா மாற்றிக் கொண்டுள்ளார்.
பி.எஸ். எடியூரப்பாவின் முழுப்பெயர் ‘புக்கனகெரெ சித்தலிங்கப்பா எடியூரப்பா’ ஆகும். இந்நிலையில், ஆன்மீகம், சோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமராலஜி ஆகியவற்றில் அதீத நம்பிக்கை கொண்ட எடியூரப்பா, 1980-களில் ஆங்கிலத்தில், தனதுபெயருக்கான எழுத்துக் களை ‘BS Yadiyoorappa’ என்று எழுதி வந்தார். இதனை 1990-களில் BS Yediyurappa என்று மாற்றினார். பின்னர், 2000-ஆவது ஆண்டில் நியூமராலஜி படி ‘BS Yeddyurappa’ என்றுமாற்றிக்கொண்ட அவர், தற்போது மீண்டும் BSYediyurappa என்ற பெயருக்கே திரும்பியுள்ளார்.அதேபோல, முதல்வர் பதவியேற்கும்போது, பச்சைத் துண்டு அணியும் சென்டிமெண்டை இந்தமுறையும் எடியூரப்பா விடவில்லை. இதற்கு முன்பு, 3 முறை முதல்வராக பதவியேற்றபோதும் பச்சைத் துண்டு அணிந்தே எடியூரப்பா பதவியேற்றார். ஆனாலும், ஒருமுறைகூட முழுமையாக 5 ஆண்டுகளை அவர் பூர்த்தி செய்ததுஇல்லை. தற்போது நான்காவது முறையாகவும், நியூமராலஜி, பச்சைத் துண்டு செண்டிமெண்ட் சகிதமாக களத்தில் இறங்கியுள்ளார்.