சண்டிகர்:
தலித் இளைஞர் ஒருவரை, சிறுநீர் குடிக்க வைத்ததுடன், அவரை அடித்துப் படுகொலை செய்த சம்பவம்,பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் சங்காலி வாலாகிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்மாலே சிங். இவரை, கடந்த10 நாட்களுக்கு முன்னர், அமர்ஜீத் சிங், ரிங்கு, லக்கி,பிந்தேர் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல், மரத்தில்கட்டி வைத்து அடித்து கொடூரமாகத் தாக்கியதுடன்,சிறுநீரைக் குடிக்க வைத்து, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது. இதில், படுகாயமடைந்த ஜக்மாலேசிங், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
“நவம்பர் 7-ஆம் தேதி என்னை ரிங்குவின் வீட்டுக்குஅடித்து இழுத்துச் சென்றனர். ஒரு கம்பத்தில் மூன்றுமணி நேரம் கட்டிவைத்திருந்தனர். பிந்தேர் என்பவர்கையில் கம்பியை வைத்திருந்தார். ரிங்கு என்னுடையகையை இறுக்கமாக பிடித்துகொண்டார். அப்போது அவருடைய அப்பா அமர்ஜீத் கையில் கம்பியை எடுத்துவந்தார். பின்னர், அவர்கள் இரக்கமில்லாமல் என்னைத்தாக்கினர். நான், ரிங்குவிடம் தண்ணீர் கேட்டேன். அவன், சிறுநீரைக் கொண்டுவந்து என்னைக் கட்டாயப்படுத்தி குடிக்கவைத்தான்” என்று ஜக்மாலே சிங் அளித்த வாக்குமூலம் ஊடகங்களில் பரபரப்பைஏற்படுத்தியது. இதையடுத்து, ஜக்மாலே சிங்கைத் தாக்கியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றுகோரிக்கைகளும் எழுந்தன.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜக்மாலே சிங் ஞாயிறன்று இறந்து போனது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தாக்கிய அமர்ஜீத் சிங், ரிங்கு, லக்கி, பிந்தேர் ஆகியோரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.