பெங்களூரு:
கர்நாடக மாநிலத்திலுள்ள கோயில் ஒன்றில், தலித் மக்கள் நுழைவதற்கு அங்குள்ள சாதி வெறியர்கள் தடை விதித்துள்ளனர்.கர்நாடக மாநிலம் கடங்காகிராமத்தில் உள்ள 70 ஆண்டு பழைமையான கோயிலை புனர மைக்கும் பணி அண்மையில் நடந்துள்ளது. இதற்காக தலித் மக்களிடமும் நிதி பெறப் பட்டுள்ளது. பணிகள் முடிந்து கடந்தசில நாள்களுக்கு முன்பு கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.அப்போது, தலித் மக்களும், கும்பாபிஷேசகத்தில் கலந்துகொண்டு, கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். அப்போது சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தலித் மக்களை கோயிலின் உள்ளே நுழைய விடாமல் தடுத்துள்ளனர். மேலும், கடுமையான சொற்களால் வசைபாடியுள்ளனர். இந்தத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் ஆதரவில்தான் இவ்வளவுகாலமும் தலித் மக்கள்கோயிலில் வழிபாடு செய்து வந்தாககூறப்படுகிறது. கடந்த ஆண்டு அந்தஎம்எல்ஏ காலமான நிலையில், சாதி ஆதிக்க வெறியர்கள், மீண்டும்பழைய வழக்கத்தைத் தொடர ஆரம்பித்துள்ளனர்.இதனிடையே, சமூக செயற்பா ட்டாளர்களின் தலையீட்டைத் தொடர்ந்து, இருதரப்பினரையும் அழைத்துப் பேசிய வட்டாட்சியர், சாதியை காரணம்காட்டி கோயி லுக்குள் அனுமதிக்க மறுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாருமே கோயிலுக்குச் செல்ல முடியாத நிலையே ஏற்படுத்தி விடுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.