business

img

தங்கம் விலை ரூ.440 குறைவு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (20-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.55 குறைந்து ரூ.9,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.60,640-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.