tamilnadu

img

50 ஆண்டுகளாக செங்கொடியை உயர்த்தி பிடிக்கும் முழுக்கோடு ஊராட்சி

 மேல்புறம், ஜன.5- கன்னியாகுமரி மாவட்டம் மேல் புறம் ஊராட்சி ஒன்றியத்தில் அரை நூற்றாண்டு காலமாக செங்கொடியை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது முழுக்கோடு ஊராட்சி. 1970 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட் டது முதல் 2020 இல் தற்போது நடை பெற்று முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் முழுக்கோடு ஊராட்சியைச் சேர்ந்த மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மகத்தான போராளிகளையே தங்களது ஊராட்சி மன்றத் தலை வராக தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில், தற்போது மரியசெல்வி விலாசினி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1970 இல் முழுக்கோடு ஊராட்சி உருவான போது, முதல் ஊராட்சி மன்றத் தலைவராக தோழர் டி.எஸ்.தம்பி என்கிற டி.சுகுமாறன் தம்பி தேர்வு செய்யப்பட்டார். 1978 முதல் 86 வரை அரசின் நியமனத் தலை வராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டு செயலாற்றினார். 1986 இல் தலைவராக தோழர் துளசிதரன் வெற்றி பெற்றார். துணைத் தலைவ ராக தோழர் ஜெயபாலன் என்கிற கோபாலன் தேர்வு செய்யப்பட்டார். 1996 இல் மீண்டும் துளசிதரன் தலைவராக வெற்றி பெற்றார். துணைத் தலைவராக தோழர் கிறிஸ்டோபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மீண் டும் மூன்றாவது முறையாக துளசிதரன் வெற்றி பெற்றார். முன்னதாக தோழர் பொன்னுமணியும், மூன்றாவது பதவிக் காலத்தில் ஒய்.ரவீந்திர தாசும் துணைத் தலைவர்களாக செயலாற்றினர். 2006 இல் மரியசெல்வி விலாசினி முதல்முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2011 இல் இரண்டாவது முறையாக வென்ற அவர், தற்போது மீண்டும் வெற்றி வாகை சூடியுள்ளார். இவரது பதவிக் காலத்தில் துணைத் தலைவர்களாக டி.ரவீந்திரராசும், பின்னர் ஸ்ரீலதா குமாரியும் துணைத் தலைவர்களாக செயலாற்றினர். முழுக்கோடு ஊராட்சி மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கியமான கிராமங்களில் ஒன்றாகும். இந்த ஊராட்சி பகுதியில் வரு கின்ற மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில் நேரடி தேர்தல் துவங்கிய காலம் முதல் 1996 - 2006 காலகட்டத்தில் இரண்டு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆசிரியர் டி.சுந்தரராஜ் வெற்றி பெற்றார். 2006 முதல் 2019 வரை நடந்துள்ள மூன்று தேர்தல்களி லும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.பேபி வெற்றி பெற்றுள்ளார். அதேபோல இந்த ஊராட்சி அடங்கியுள்ள மாவட்ட பஞ்சாயத்து வார்டிலும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 1996 - 2001 இல் தோழர் சரசம் ஜெயராஜ், 2001 - 2006 இல் தோழர் ஜி.கனகபாய், 2011 - 13 இல் தோழர் துளசிதரன் ஆகி யோர் மாபெரும் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினர் என்பது குறிப்பி டத்தக்கது. 2003 இல் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தபோது தான், இப்பகுதி மக்களின் அன்பை பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி தலைவ ரான தோழர் துளசிதரன் காலமானார். இப்படி மக்கள் நலனில் இடைவிடாமல் கவனம் செலுத்தி, மக்க ளோடு மக்களாக நின்று அவர்களின் உற்ற தோழனாக மாறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 50 ஆண்டு காலமாக தொடர்ந்து மகத்தான வெற்றி பெற்று வருவது, மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது என்ப தற்கான எடுத்துக்காட்டாகும். முழுக்கோடு ஊராட்சியின் அரை நூற்றாண்டு காலமாக வெற்றி பெற்று வருகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  - ரமேஷ், அருமனை